கடலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் மீட்பு
கடலில் மீன்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சுருக்குவலை உள்ளிட்ட சில பொருட்களை புதன்கிழமை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது கடலில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதற்கு கடலில் பதுக்கி வைத்திருந்த 2 சுருக்குவலைகள், ஒரு எஞ்சின், ஒரு வோர்ட், டோச் லைட், வெற்றி, உள்ளிட்ட சுமார் 15 லட்சம் ரூபா மதிப்பீட்டிலான பொருட்கள் என்பன தேத்தாதீவு, மற்றும் களுதாவளைக் கடற்பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாவும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்துள்ளார்.



புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri