பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 9ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த ஆணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri