இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு: மூவர் கைது(Photo)
வல்வெட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இன்று அதிகாலை மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவல்
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டிதுறையில் கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 217 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.
மூவர் கைது
இதன்போது பலாலி அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 20, 28 மற்றும் 30 வயதுடைய மூவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கஞ்சா பொதிகளை கடத்த
முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளனர்.