தனியார் பேருந்திலிருந்து போதைப்பொருள் மீட்பு(Photos)
மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து இன்று (30.01.2023) மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் கஞ்சா பொதிகள் இருப்பதாக தள்ளாடி இராணுவ தலைமையகத்திற்கு வழங்கப்பட்ட ரகசிய தகவலையடுத்து, தனியார் பேருந்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட பொதி
இதன்போது பேருந்தின் பின் ஆசனத்திற்கு முன் பகுதியில் உள்ள ஆசனத்தின் கீழே காணப்பட்ட இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட பொதி ஒன்றை எடுத்து சோதனை செய்துள்ளனர்.
அந்த பொதியில் கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 380 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு பொதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தின் பின் இருக்கையில் இருந்த 4 பேரை
பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
