புத்தளத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
புத்தளம் - முள்ளிபுரம் பகுதியில் அடையலாம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - முள்ளிபுரம் கலப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் சடலமொன்று மிதந்து காணப்படுவதை அவதானித்துள்ள நிலையில் புத்தளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பின்னர் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டதுடன் புத்தளம் நகர திடீர் மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டு சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
