பளையில் நிலத்தில் புதைந்து கிடந்த 55 மோட்டார் குண்டுகள் மீட்பு
பளை பகுதியில் இருந்து நிலத்தில் புதைந்து கிடந்த 55 மோட்டார் குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணியில் உரிமையாளர் காணியினை துப்பரவு செய்த போது நிலத்தில் புதைந்த நிலையில், வெடிப்பொட்கள் இருப்பதனை அவதானித்து பொலிசாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் 11 மோட்டார் செல்களை அடையாளப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்தினை அகழ்ந்த போது அங்கிருந்து 55 மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றினை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam