கிணற்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையிலே அவரது சடலம் இன்று உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச்சடலம் மீதான பிரேத உடற்கூற்று பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
சிதம்பரமோகன் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri