ஊடரங்கு உத்தரவை உடன் மீளப்பெறுங்கள் - சஜித் கோரிக்கை
பொலிஸ் ஊரடங்கு உத்தரவை அறிவிக்க பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை உடன் மீளப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை சட்டவிரோதமாக மீற முற்பட்டால், நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவீர்கள்.
அத்துடன், அரசியலமைப்பை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
If you fail to do so, or if any police officers seek to unlawfully infringe the right to protest of any citizen, you will be held personally responsible, and appropriate action will be taken for violation of the Constitution.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 8, 2022
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது
இதனிடையே, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாளை வீதிக்கு வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு வித்துள்ள அவர், சர்வாதிகாரத்தை முறியடித்து மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Police curfew is a fraud. It is illegal. Get on to the streets tomorrow. Defy the dictatorship and join with the people to make democracy victorious. Yes we can!
— Sajith Premadasa (@sajithpremadasa) July 8, 2022