தாமரை கோபுரத்தை பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை சாதனை இலக்கை எட்டியது
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் 20,883 உள்ளூர் சுற்றுலா பயணிகளும் 163 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்ததாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கடந்த 6ம் திகதி மட்டும் 12,204 உள்ளூர் சுற்றுலா பயணிகளும், 76 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்திருந்தனர்.

தாமரை கோபுரம்
அத்துடன், தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான பார்வையாளர்கள் வருகை தந்த நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருந்தமை விசேட அம்சமாகும்.
இதுவரை, தாமரை கோபுரத்தை பார்வையிட்ட மொத்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 815,982 ஆகவும், பார்வையிட்ட மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை13,057 ஆக பதிவாகியுள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam