புதிதாக புனரமைக்கப்படும் இலங்கை உயர் நீதிமன்றம்
இலங்கை உயர் நீதிமன்ற வளாகத்தின் விரிவான புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
23,602 சதுர மீட்டர் பரப்பளவில், உயர்நீதிமன்றம் மற்றும் நீதி வளாகம், பவர் சென்டர் (power center), காவலர் அறை மற்றும் வெளிப்புற பணிகள் ஆகியவை புதுப்பிக்கப்படும்.
1989 ஆம் ஆண்டு சீனா நிதியுவதி மூலம் கட்டப்பட்ட உயர்நீதிமன்ற வளாகம், இலங்கையின்; நீதித்துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
32 மாத கால மறுசீரமைப்பு பணி
இந்தநிலையில், சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் 240 மில்லியன் யுவான் செலவில் உயர் நீதிமன்ற வளாகத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம், இலங்கையின் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் மறுசீரமைப்பு இரண்டு கட்டங்களாக 32 மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் அனைத்து பணிகளும் அக்டோபர் 2025 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |