மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் - இ.தொ.கா
மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்து கொள்வதற்கான பரிந்துரைகள் வெகு விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இ.தொ.காவின் உபதலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அப்புத்தளை காகொல்ல பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்ட கம்பனிகள் மேலதிக கொடுப்பனவை வழங்க ஒப்புக்கொண்டதன் பின்னர் மேலதிக கொழுந்தைப் பறிப்பதே உசிதம். மேலும் இ.தொ.கா 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில் இதயசுத்தியுடன் நடந்து கொண்டுள்ளதை எவரும் மறுக்கக் கூடாது.
எனினும் காகொல்ல, பொகவத்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 25 கிலோ தேயிலையைப் பறிக்க வேண்டும் எனத் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை நிர்ப்பந்திப்பது வேடிக்கையாகும்.
அந்த பிரச்சினைக்கு அதிகபட்சமாக எதிர்வரும் 25 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும். இ.தொ.கா எப்போதும் தொழிலாளர் நலன்களை மாத்திரம் முன்னிறுத்திச் செயற்பட்டுள்ளது. அதற்கமையவே 1000 ரூபா சம்பள விடயத்தையும் அணுகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் முன்னர் மலையக பெருந்தோட்ட மக்களை கம்பனிகளிடம் அடகு வைத்தாகவும்
அவர்களை இ.தொ.காவே மீட்டெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.