புலம்புவதை விட செயல் முக்கியம்! எச்சரிக்கை, உணவுப் பற்றாக்குறையை தடுக்காது!
எச்சரிக்கைகள் பயன்தராது
பல காரணங்களை மேற்கோள் காட்டி, கடந்த கால நடவடிக்கைகளின் மீது பழியை சுமத்தி வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறை பற்றிய கடுமையான எச்சரிக்கைகள் தொடர்கின்றன.
முன்கூட்டியே எச்சரிப்பது பயனுள்ளது மற்றும் புத்திசாலித்தனமானது என்றாலும், எச்சரிக்கைகள் மட்டுமே சாத்தியமான பற்றாக்குறையைத் தடுக்காது என்று விவசாயிகள் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அறுவடை மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர், புலம்புவதற்குப் பதிலாக, ஒருபோதும் வராத உள்ளீடுகளைக் கோருவதற்குப் பதிலாக, கிடைக்கக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி முடிந்தவரை சிறந்தவற்றை மேற்கொள்ளவேண்டும் என்று அந்த மன்றம் வலியுறுத்தியுள்ளது.
நீண்ட காலத் தீர்வுகளை உத்திகளை வகுப்பது, நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான பாதையை உருவாக்குவது, குறுகிய கால முடிவுகளும் செயல்களும் அந்தப் பாதையை எந்த வகையிலும் தடை செய்யாமல் இருப்பதை உறுதிசெய்வது என்பன மேற்கொள்ளப்படவேண்டும் என்று விவசாயிகள் மன்றம் கோரியுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பொறுத்தவரை, பரிந்துரைக்கப்பட்ட அளவை பூர்த்தி செய்வது கூட சாத்தியமில்லை.
எனவே இந்த மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் உகந்த பயன்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
பரிந்துரைகள்
இந்தநிலையில் மூன்று பரிந்துரைகளை மன்றம் அறிவித்துள்ளது.
அ) இரசாயன உரங்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் விளைச்சலைக் காட்டிலும், இரசாயனம் மற்றும் கரிம உரங்களின் தகுந்த கலவையானது 20 சதவீதத்திற்கும் அதிகமான விளைச்சலை அதிகரிக்கும் என்று பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் வெளிவந்த தகவல்களாகும். இந்த ஆராய்ச்சி மண் வகைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பயிர் சார்ந்தது. எனவே, விவசாயத்துறையின் பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்தவேண்டும்.
ஆ) இரசாயன உரத்தின் மீதான தடை நடைமுறைக்கு வந்ததிலிருந்து, பல விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் இரசாயனமற்ற இயற்கை உரங்களைத் தயாரித்து பயன்படுத்துவதைத் தேர்ந்தெடுத்தனர். எனவே அவசர சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடைமுறை உடனடியாக பின்பற்றப்படவேண்டும்.
இ) பயன்படுத்தப்படாத விளை நிலங்களை பயிரிடுதல் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் விவசாயிகள் மன்றம் கோரியுள்ளது.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பு கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தீவிரத்தை ஓரளவு தணிக்க தேவையான நடவடிக்கைககள் அவசியமாகும் என்றும் விவசாயிகள் மன்றம் பரிந்துரைத்துள்ளது.



