பிரித்தானியாவால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கான உலகின் சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய சுற்றுலாத்துறை இதழான 'டைம் அவுட்' வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாத பருவகால வசீகரம்
இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் காணப்படும் அழகான கடற்கரைகள், மலைப் பிரதேசங்களுக்கான பயணங்கள், புராதன மற்றும் தொல்பொருள் இடிபாடுகள், வனவிலங்கு சஃபாரிகள் ஆகியவை இலங்கையை உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக உயர்த்தியுள்ளன.
ஒக்டோபர் மாதத்தில் அனுபவிக்கக்கூடிய பருவகால வசீகரம், கலாசார நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டதாக 'டைம் அவுட்' இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் துருக்கி இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
