பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த மாணவி - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
குருணாகல் கிரியுல்ல பிரதேசத்தில் ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணியை சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதில் பிரியாணியால் ஏற்பட்ட ஒவ்வாமையை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவி
ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
உணவுப் பொட்டலங்கள்
குறித்த உணவுப் பொட்டலத்தை மேலும் 3 குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். எனினும் உணவை சாப்பிட்டதும் இந்த மாணவிக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் உணவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்து்ளளா்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
