திடீரென வைத்தியசாலையில் மகிந்த.. காரணத்தை வெளிப்படுத்திய நாமல்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நலமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வயதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் கூறுகையில்,
“வயதின் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அவர் பேரணியில் பங்குகொள்ளவில்லை.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
சீரற்ற காலநிலை
நுகேகொடை பேரணியின் மூலம் நாம் அரசாங்கத்துக்கு ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம்.

இப்போது சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பலரின் உயிர்களை காப்பாற்ற வேண்டியுள்ளது.

அரசாங்கம் முதல் நடவடிக்கையாக காப்பாற்றப்பட வேண்டிய உயிர்களை காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri