ஜனாதிபதி அநுர வடக்கில் இராணுவத்தை வெளியேற்ற காரணம்..!
நடைபெற்று முடிந்த தேர்தல்கள் இரண்டிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபியினர் மாற்றம் என்ற ரீதியிலே அனைவருக்கும் சம அந்தஸ்து கொடுப்போம் என்கின்றார்கள்.
அந்தவகையிலே வடக்கு கிழக்கிலே தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாக்களித்த மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தே வாக்களித்துள்ளார்கள். வாக்களித்த மக்களுக்கு இவர்கள் செய்ய வேண்டியது மக்கள் விரும்பும் அந்த அரசியல் மாற்றத்தையே ஆகும்.
குறிப்பாக, இலங்கையின் சனத்தொகையிலே குறைந்தளவான தமிழ் மக்களே உள்ளார்கள். இவ்வாறு குறைந்தளவான தமிழ் மக்கள் உள்ள வடக்கு - கிழக்கு பகுதிகளிலே இராணுவ பரம்பல் அதிகமாக உள்ளது.
எனினும், இந்த முறை தேர்தலிலே யாழ்ப்பாண மாவட்டத்திலே மக்கள் பிரதிநிதிகள் ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக கூறப்பட்ட விடயமாக மக்களின் சனத்தொகை பரம்பல் குறைவாக இருந்தமை கூறப்பட்டது.
இவ்வாறு சனத்தொகை பரம்பலை பார்த்து பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது என்றால் இங்குள்ள இராணுவத்தையும் அநுர அரசாங்கம் இதைப்போலவே குறைக்க வேண்டும்.
இவ்வாறாக, லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனடாவில் உள்ள சுவாமி மணி சங்கரானந்தா வடக்கு கிழக்கின் தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |