18 ஆம் இலக்க சீருடையை அணிய இதுவே காரணம்: மனம் திறந்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி 18 ஆம் இலக்கம் அச்சிடப்பட்ட சீருடையை தான் அணிவதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த காரணத்தை விளக்கியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது
இந்திய அணிக்காக முதன் முதலாக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் களமிறங்கும்போது நான் கேட்காமலேயே 18 ஆம் இலக்க சீருடை எனக்கு வழங்கப்பட்டது.
Today’s date ? VK’s jersey no.@ImVkohli explains the importance of 1️⃣8️⃣ in his life’s events! Will today’s match in the #RaceToPlayOffs add to the list?
— Star Sports (@StarSportsIndia) May 18, 2023
Tune-in to #SRHvRCB at #IPLonStar
Today | Pre-show at 6:30 PM & LIVE action at 7:30 PM| Star Sports Network #BetterTogether pic.twitter.com/SWlA8gT3d0
வாழ்வில் முக்கிய இரு தினங்கள்
இதனையடுத்து இந்திய அணிக்காக நான் களமிறங்கிய முதலாவது போட்டி (18.08.2008) ஆம் திகதி நடைபெற்றது.
இதேவேளை (18.06.2006) ஆம் திகதி எனது தந்தை காலமாகினார்.
எனது வாழ்வில் மிகவும் முக்கியமாக இரு தினங்களோடு 18 ஆம் இலக்கம் தொடர்புடையதால் தற்போது வரை எனக்கு இந்த இலக்கம் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |