பெரும் ஆபத்தில் சபோரிஜியா அணுமின் நிலையம் - ஐ.நா விடுத்துள்ள அவசர கோரிக்கை
உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளால் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக அணுசக்தி கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யா மார்ச் மாதம் கைப்பற்றியது. இந்நிலையில், ரஷ்யப் படைகள் பயங்கரவாத தந்திரோபாயங்களை பயன்படுத்தி, அந்த தளத்தில் இருந்து பொதுமக்கள் பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை வீசுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
தீயுடன் விளையாடுவதற்கு சமம்
உக்ரைன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் ஒரு அணுசக்தி பேரழிவின் உண்மையான ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார்.
"எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் அணுமின் நிலையத்தை நோக்கி செலுத்தினால் அது தீயுடன் விளையாடுவதற்கு சமமானதாகும், இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
உக்ரேனிய ஊழியர்கள் தங்கள் முக்கியமான கடமைகளை அச்சுறுத்தல்கள் அல்லது அழுத்தம் இல்லாமல் செய்யவதற்குமம், தொழில்நுட்ப ஆதரவை வழங்க அணுசக்தி கண்காணிப்புக்குழு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கதிரியக்க கசிவுகள் ஏற்படும் அபாயம்
உக்ரைன் மற்றும் பிற இடங்களில் உள்ள மக்களை அணுசக்தி விபத்திலிருந்து பாதுகாப்பதற்காக, நாம் அனைவரும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு செயல்பட அணுசக்தி கண்காணிப்புக்குழு தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களால் ஒரு சக்தி அலகு மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கதிரியக்க கசிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சபோரிஜியா ஆலையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் ஆலையின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியது என்று அதன் இயக்குனர் Enerhoatom குறிப்பிட்டுள்ளார்.