குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் : அமைச்சர் ஹரின்
உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்ற சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்க இரவு விடுதிகளில் வெகுநேரம் விருந்துகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது பதவியிலிருந்து விலகுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விருந்து நடத்துகிறார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இரவு விடுதிகளில் அல்லது எங்காவது விருந்தில் ஈடுபட்ட காட்சிகளை யாராவது நிரூபித்தால், தாம் பதவி விலக தயாராக இருப்பதாக ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |