பதவிகளை கைவிட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேற தயார்: மகிந்த அமரவீர - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்திலிருந்து விலகுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உடனடியாக தீர்மானித்தாலும், அதற்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர ( Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அதிகார சபைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தமிழ்வின் மாலை நேர செய்திகளின் தொகுப்பு,