யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார்! - இராணுவத் தளபதி அறிவிப்பு
"யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்." இவ்வாறு கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஜனாதிபதியின் பணிப்பில் 2 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
யாழ். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நாங்கள் மேலும் தடுப்பூசிகளை யாழ். மாவட்டத்துக்கு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்" - என்றார்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam