தகனம் செய்வதற்கான செலவினை வழங்கத் தயார்! இளைஞர்கள் முன்வருகை
வவுனியா மாவட்டத்தில் கோவிட் நோய் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்கான செலவினை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாக வவுனியாவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் அவரது நண்பரான ம.மயூரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்றினால் இறப்பவர்களின் சடலங்கள் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபையின் மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றது.
அவற்றை எரிப்பதற்கு நகரசபையால் 7 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எரியூட்டுவதற்கான கட்டணத்தினை செலுத்தமுடியாத நிலையில் உள்ளவர்கள் எம்மை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அந்த கட்டணத்தின் முழுத்தொகையினையும் நகரசபைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக குறித்த இருவரும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான உதவி தேவையானவர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்ப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் - 0778500294 / 0773525375





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
