விசாரணையை எதிர்கொள்ள தயார்:ஹரின் பெர்னாண்டோ
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக எவ்வாறான விசாரணைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனது சிறிய பை ஒன்றையும் மின் பந்தம் ஒன்றையும் நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்தேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு தடையை ஏற்படுத்தி சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வந்ததாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அவையில் சுமத்திய குற்றச்சாட்டுக்கு இன்று பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ சபை தலைமை தாங்கிய உறுப்பினரின் அனுமதியுடன் இந்த பதிலை அளித்துள்ளார். எனது பை பொருட்களை பரிசோதிக்கும் இயந்திரம் மூலம் பரிசோதிக்கப்பட்டது. ஆபத்தான எதனையும் நான் நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வரவில்லை.
அத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கும் தடையேற்படுத்தவில்லை எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சம்பந்தமாக அடுத்த வாரம் ஒரு விடயத்தை செய்ய தயாராகி வருவதாகவும் அந்த பணிக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri