எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்: மொட்டுக் கட்சி சூளுரை
நாட்டில் அடுத்து என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது என்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மே தினக் கூட்டம்
அத்துடன், இடதுசாரிக் கட்சிகள் தேர்தலின்போது ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மே தினக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பற்றியே இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு - கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam