இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுக்க தயார் : தெற்கு மீனவ அமைப்புகள்
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாகத் தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது.
இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்பினரும் கூட்டாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளின் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
2500 இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தலைநகர் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.
அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியவாறு நாம் போராட்டத்தைக் கைவிட்டிருந்தோம்.
ஆனால் இந்திய மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வடமராட்சிப்
பகுதியில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்
இடம்பெற்றுள்ளது.இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri