தொடர் வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்த டெல்லி அணி
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் டெல்லிகேபிடல்ஸ்(DC) அணி வெற்றிப்பெற்றுள்ளது.
பெங்களூருவில் இன்றையதினம்(10) நடைபெற்ற இந்த போட்டியில்,ரோயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் டெல்லிகேபிடல்ஸ் அணி மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லிகேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
அதன்படி, முதலில் பேட் செய்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றது.
பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ஓட்டங்கள் எடுத்தனர். ரஜத் படிதர் 25 ஓட்டங்களும், விராட் கோலி 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
டெல்லி அணி
இதையடுத்து, 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.
அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் பொறுப்புடன் விளையாடினார்கள்.
சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்து 93 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவரில் 169 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தோல்வியடையாத அணி
டெல்லி அணி பெறும் 4ஆவது வெற்றி இதுவாகும். ரோயல் சேலஞ்சர்ஸ் அணி பெறும் 2ஆவது தோல்வி இதுவாகும்.
டெல்லிகேபிடல்ஸ் அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று தோல்வியடையாத அணியாக உள்ளதுடன் நிகர ஓட்ட விகிதங்களின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலும் உள்ளது.