ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார்.
இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள்
பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள்.
இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார்.
எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.
இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார்.
தமிழ் இனப்படுகொலை
புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
“இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம்.
படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம்.
காசாவில் இடம்பெறும் மோதல்
இந்த திரைப்படம், இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம் இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன.
காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார்.