ஆங்கிலத்தில் பேச மறுத்த ஜடேஜா! உருவான மற்றுமொரு சர்ச்சை
வழமையாக சர்ச்சைகள் இல்லாமல், போர்டர்-கவாஸ்கர் கிண்ணம் முழுமையடையாது என்ற வகையில் இந்த தடவையும் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன.
இந்திய வீரர் விராட் கோலி(Virat Kohli) ஒரு அவுஸ்திரேலிய செய்தியாளருடன் கடந்த வியாழக்கிழமையன்று விமான நிலையத்தில் வைத்து முரண்பட்டமை, சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த செய்தியாக இருந்தது.
ஜடேஜா
இதன்போது தமது பிள்ளைகளுக்கு தனியுரிமை உள்ளதாகவும் அவர்களை காணொளிப்படுத்த வேண்டாம் என்றும் கோலி செய்தியாளர்களுடன் வாதத்தில் ஈடுபட்டார்.
💬💬 R Ashwin played with me like an on-field mentor#TeamIndia all-rounder Ravindra Jadeja reminisces about his partnership with R Ashwin. 👌👌#ThankyouAshwin | #AUSvIND | @imjadeja pic.twitter.com/3QGQFYztmB
— BCCI (@BCCI) December 21, 2024
இந்தநிலையில், தற்போது அவுஸ்திரேலிய ஊடகங்கள் ரவீந்திர ஜடேஜாவை(Ravindra Jadeja) மையப்படுத்தி மற்றுமொரு செய்தியை வெளியிட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துரைக்களை வெளியிட்ட ஜடேஜா, எந்த கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் பதிலளிக்கவில்லை. இதனால் அவுஸ்திரேலிய செய்தியாளர்கள் குழப்பமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய அணியின் ஊடக முகாமையாளரும் அவுஸ்திரேலிய செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காணொளிக்காட்சிகள் காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
