முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பாவுக்கு(Robin Uthappa) எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
உத்தப்பா பெங்களூரைச் சேர்ந்த சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
பிடியாணை
இந்நிலையில், அந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் வசூலித்த சுமார் ரூ.24 லட்சம் ரூபாயை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உத்தப்பாவின் நிறுவனம் ரூ.24 லட்சத்தை பிடித்துள்ளது.
எனினும், அந்த தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான முறைப்பாட்டில் தான் தற்போது உத்தப்பாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தப்பா துபாயில் உள்ள நிலையில், அவர் 27ஆம் திகதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செலுத்தாத பட்சத்தில் ரொபின் உத்தப்பா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
