விறுவிறுப்பான ஆட்டம்: ரச்சினின் சதத்துடன் பாகிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
குறித்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று(04.11.2023) நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அரையிறுதி வாய்ப்பு
அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட செய்தது. அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் உள்ளன.
இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 108 ஓட்டங்களையும் வில்லியம்சன் 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொகமட் வசீம் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி தற்போது வரை 15 ஓவர் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
