கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Shan Feb 10, 2026 06:58 AM GMT
Report

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செயற்படுகளில் ஈடுபடும் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்களினாலேயே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி வீழ்ச்சியடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! பிரபல நடிகையின் மகன் கைது

கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! பிரபல நடிகையின் மகன் கைது

மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் நேற்று(09.02.2026) இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி கலந்துரையாடலுக்கு அழைப்பு

தற்போது தான் இந்த கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் விளக்கம் தருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தால் பாதிக்கப்படப் போகின்ற மக்களை ஒருபோதும் மகாவலி அதிகாரசபை அழைத்து கலந்துரையாடவில்லை.

கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை | Ravikaran Mp S Statement

கடந்த 23.01.2026அன்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்துமாறு கோரியிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து எம்மால் இந்த கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக கடந்த 02.02.2026அன்று பாரிய எதிர்ப்பு ஆரப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தகைய எமது கோரிக்கைகள் மற்றும் ஆரப்பாட்டத்தின் மூலம் எழுந்த அழுத்தங்கள் காரணமாகவே இவ்வாறு இந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்திற்காக அபகரிக்கும் தமிழர் இடங்கள் தொடர்பான விபரங்களை மகாவலி அதிகாரசபை மூடி மறைக்கின்றது.

அதேவேளை, இந்த திட்டத்திற்காக அபகரிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் விபரங்கள் இதிலே மகாவலி அதிகாரசபையால் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.

இலங்கையின் அதிகார பூர்வ நிதி இருப்பில் சரிவு

இலங்கையின் அதிகார பூர்வ நிதி இருப்பில் சரிவு

குறிப்பாக, கூழாங்குளம் வயல்காணிகள் 88ஏக்கர், வெடிவைத்தகல்லு 87ஏக்கர், வெடிவைத்த கல்லு கிராமம் 124ஏக்கர், ஈச்சங்குளம் வயல் 95ஏக்கர், கோவில் புளியங்குளம் 158ஏக்கர், காட்டுப்பூவரசங்குளம் 258ஏக்கர், காஞ்சூரமோட்டைக்கிராமம் 100ஏக்கர் உள்ளடங்கலாக மொத்தம் 910ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா திட்டம் தொடர்பான அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தற்போது அந்த விடயங்கள் தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப்படவில்லை. 

 தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் அபாயம்

மகாவலி அதிகாரசபை என்றால், மரணத்தை ஏற்படுத்துகின்ற வலி என்றே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது. மகாவலி அதிகாரசபையினை தமிழ்மக்கள் அவ்வாறே கருதுகின்றனர்.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவிலையோ, வவுனியாவிலையோ ஒருதமிழ் மக்களுக்கும் மகாவலி அதிகாரசபை காணிகளை வழங்கவில்லை.

கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை | Ravikaran Mp S Statement

தமிழ் மக்களின் பூர்வீககாணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிகின்ற வேலைகளையே மகாவலி அதிகாரசபை மேற்கொண்டுவருகின்றது.

எனவே தான் மகாவலி அதிகாரசபையை மரணத்தைத் தருகின்ற வலி எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

 தமிழ் மக்கள் அழைக்கப்படவில்லை..

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

குறிப்பாக, கடந்த 1984, 1985ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினத்தவர்கள் வலிந்து குடியேற்றப்பட்டனர். மேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் இவ்விதமான திட்டங்களைச் செயற்படுத்த முயற்சிக்கும்போது பாதிக்கப்படுகின்ற மக்கள் அனைவரையும் அழைத்துத் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பான்மையின கமக்கார அமைப்புக்களைச் சாரந்தவர்களுக்கு கருத்துக்கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. எனினும் இத்திட்டத்தால் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்ற, இந்த திட்டத்தினால் தமது நிலங்களை இழக்கின்ற தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனவே பாதிக்கப்படுகின்ற எமது அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்தக் கலந்துரையாடலில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தப்பம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூழாங்குளம் கமக்கார அமைப்பு, வெடிவைத்தகல்லு கமக்கார அமைப்பு, ஈச்சங்குளம் கமக்கார அமைப்பு, கோவில் புளியங்குளம் கமக்கார்அமைப்பு என்பன இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை | Ravikaran Mp S Statement

இவ்வாறாக மகாவலி அதிகாரசபை இத்திட்டத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள எமது தமிழ் மக்களைப் புறக்கணித்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடுசெய்துள்ளது. இவ்வாறே ஒவ்வொரு விடயங்களிலும் மகாவலி அதிகாரசபை எமது தமிழ் மக்களைப் புறக்கணிப்புச் செய்துவருகின்றது.

மேலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இந்தக் கலந்துரையாடலில் புறக்கணித்துவிட்டு ஏற்கனவே மணலாற்றில் வலிந்து குடியேற்றப்பட்ட 4,372 பெரும்பான்மையினக் குடும்பங்களையும், குடியேற்றப்படவுள்ள 1,626 பெரும்பான்மையினக் குடும்பங்களையும் இத்திட்டத்தில் உள்வாங்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்கின்றது. என்னால் முன்வைக்கப்படுகின்ற இந்த குற்றச்சாட்டுக்களை மகாவலி அதிகாரசபை ஒருபோதும் மறுத்துப்பேச முடியாது.

கிவுல் ஓயாத்திட்டத்தால் நில அதிர்வு அபாயம்

இந்த திட்டத்தை செயற்படுவதானால் வானிலை ஆய்வாளர்களுடைய மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதா? இந்த இடங்கள் பருவப்பெயர்ச்சி மழையுடன் தொடர்புடைய இடங்களாகும். எனவே இத்திட்டத்திற்காக பாரிய அளவில் காடுகள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி குறைவடையுமென சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் முல்வைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் ஒரு நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான பாரிய நீர்த்தேக்கங்களை அமைப்பதன்மூலம் புவித்தட்டில் ஏற்படுகின்ற பாரத்தினாலேயே நிலதிர்வுகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அத்தோடு இத்தகைய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளபோது நில அதிர்வுகள் காரணமாக அணைக்கட்டுக்கள் உடைப்பெடுத்தால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது.

கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை | Ravikaran Mp S Statement

எனவே இந்த பாரிய நீர்த்தேக்கத்தால் அத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்னசெய்வது. அத்தகைய பாதிப்புநிலைகள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதா? எவ்வித முறையான அறிக்கைகளுமின்றி இங்குவருகைதந்து இங்கு எமது மக்களின் பூர்வீக காணிகளையும், அடர்வனங்களையும் ஆக்கிரமித்து தமிழ்மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையிலான மற்றும் முறையற்ற திட்டங்களையும் மகாவலி அதிகாரசபை மேற்கொள்ள முனைகின்றது.

நாம் சிங்கள மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ எந்த இனமக்களுக்கும் எதிரானவர்கள் கிடையாது. பெரும்பான்மையின இனவதாதிகளுக்கே எதிரானவர்கள்.

இவ்விதமான பாதிப்புக்களை தோற்றுவிக்கின்ற வகையிலான முறையற்ற திட்டங்களை மகாவலி அதிகாரசபை இங்கு ஏற்படுத்த முனைவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் வீழ்ச்சி

எமது தமிழர் தாயகப்பரப்புக்களில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற திணைக்களங்களே தமிழ் மக்களின் காணிகளை அதிகளவில் அபகரிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்ற வகையில் செயற்படுகின்றன.

இந்த திணைக்களங்களே இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைவார்கள்.

எனவே, இந்த திணைக்களங்களின் அத்துமீறிய அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு கடிவாளமிடுமாறு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US