தமிழ் தலைவருக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி, சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜிக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று(21.05.2026) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
பிரிகேடியர் பால்ராஜ்
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எம்மை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.
உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.