நித்தகைக்குளச் சீரமைப்புப்பணிகள் - நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன்
முல்லைத்தீவு - குமுழமுனை கமநலசேவைநிலயப்பிரிவிலுள்ள ஆண்டான்குளம் பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புப்பணிகள் மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அப்பகுதிக்குரிய கமக்கார அமைப்புப் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்பு பிரதிநிதிகளன் அழைப்பையேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 02.04.2026 நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்திருந்தது.
இத்தகையசூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல்நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

