முல்லைத்தீவில் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ரவிகரன் எம்பி
முல்லைத்தீவு (Mullaitivu) - மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார்.
குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது அந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது.
இதனால் அந்த கிராம மக்கள் பெருத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.
கோரிக்கை கடிதங்கள்
இதன்போது, சிராட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிச்சீரமைப்பு, நெல் உலரவிடும் தளம் அமைத்தல், யானைவேலி அமைத்தல், சிராட்டிகுளம் மாதிரிக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமையால் மக்கள் எநிர்நோக்கும் பிரச்சினைகள், பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை, வனவளத் திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் மக்களால் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

அந்தவகையில், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை தொடர்பான கோரிக்கை கடிதங்களை தனித்தனியே பெற்றுக் கொண்டதுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், அப்பகுதி மக்கள் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களான யோகானந்தராசா, உதயகுமார் ஆகியோரும் நடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri