இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோத கூடாது! ரவிச்சந்திரன் அஸ்வின் பகிரங்கம்
நேற்று(15.02.2026) நடைபெற்ற இந்த போட்டியில் பலமான ஆட்டம் இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், போட்டியின் எந்த இடத்திலும் பாகிஸ்தான் அணியை ஆதிக்கம் செலுத்த விடாமல் ஒருதலைபட்சமாக இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர்.
மீண்டும் மோதக்கூடாது!
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில்,
டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதக்கூடாது என்பதே தனது விருப்பமாக உள்ளது. என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு வரவேண்டாம் என்று நான் நம்புகிறேன்.

ஏனெனில் இந்த தோல்வி அவர்களுக்கு மிகவும் ஒரு மோசமான தோல்வி. இதேபோன்று, பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு வந்தாலும் இந்திய அணி அவர்களை வெகு எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்பது உறுதி. நேற்றைய போட்டியில் இந்திய அணி அடித்த 175 ரன்கள் என்பது 250 ரன்களுக்கு சமமானது.
ஒரு நடுநிலையான ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்ட வேளையில் பாகிஸ்தான் அணி ஒரு சிறிய போராட்டத்தை கூட அளிக்காமல் தோல்வியை சந்தித்தது.
எனவே, இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக்கூடாது என்றார்.