திருகோணமலை மாவட்ட கோவிட் தொற்றிற்கான இணைப்பாளராக வைத்தியர் என்.ரவிச்சந்திரன் நியமனம்
திருகோணமலை மாவட்ட கோவில் -19 இணைப்பாளராக வைத்தியர் என்.ரவிச்சந்திரன் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளில் நிலவுகின்ற தேவைகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்திக்கும் வகையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தங்களுடைய பிரச்சினைகளை மாவட்ட இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் மூலமாக அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் 0770450860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது
ravidssoorya@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தங்களுடைய பிரச்சினைகளைத்
தெரியப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.




இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
