இராவணன் அரக்கனா! தமிழனா! வந்தேறிகளால் மறைக்கப்படும் தமிழனின் வரலாறு
சூழ்ச்சிகளால் வெல்ல முடியாத வீரன் என்பதாலே இராவணன் அரக்கன் என சொல்லப்பட்டான் என்று கலையரசி நடராஜன் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாரையெல்லாம் சூழ்ச்சி செய்யாமல் நேரடியாக தாக்க முடியாதோ அவர்களை எல்லாம் ஆரியர்கள் அரக்கன் என்றே சொல்வார்கள்.
இராவணன் தமிழன் இல்லை
ஆரம்பகாலம் முதல் ஆரியர்கள் தமிழர்களை அரக்கர்கள் என்று தான் சொல்கின்றார்கள். இராவணன் தமிழன் இல்லை. தமிழ் அறிந்தவன். அவனும் ஒரு பிராமணன் தான். ஆனால் அவனை அரக்கன் என்று சொல்வார்கள்.
மஹாபலி சக்கரவர்த்தி என்பவர் ஒரு உயிருக்கும் தீமை இழைக்காதவர் அவரையும் அரக்கன் என்றே ஆரியர்கள் சொன்னார்கள்.
இப்படி அவர்களால் வெல்ல முடியாது என தெரிந்ததால் தான் இராமனை வைத்து இராவணனை கொன்றார்கள்.
இராமனும் பிராமணன் அல்ல. அகத்தியரிடம் சிவ தீட்ச்சை பெற்ற தமிழர். எனவே தமிழர்களையே தமிழர்கள் அழிக்கும் நிலையை எற்படுத்தினார்கள்.
வள்ளுவனின் ஒரு திருக்குறள் போதும்...!
இதேவேளை இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் நாம் பின்பற்ற வேண்டிய தேவை இல்லை. வள்ளுவனின் ஒரு திருக்குறளிலே அவை அடங்கிவிடுகின்றன.
அவற்றை படித்து நமக்கு தேவையான விடயங்களை நாம் தெரிந்துகொள்ளலாம் அதில் தவறில்லை.
தமிழர்களின் வாழ்க்கையை சொல்லும் 60,000 கல்வெட்டுக்கள் மைசூரில் மறைந்து கிடக்கின்றன. அவற்றை நாம் படிக்கவில்லை அதில் எவ்வளவு விடயங்கள் இருக்கும். யாரும் அதை கவனிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பெரும்பாலான வந்தேறிகள் பெரிய கட்டிடங்களை அமைக்கும் போது, அந்த கல்வெட்டுக்களை வைக்க இடமில்லையா? இதை பற்றி தான் நாம் கவலைப்பட வேண்டும்.
அவை நமது உரிமைகள் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். உயிருள்ளவரை நமது உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது.”என தெரிவித்துள்ளார்.