இரத்தினபுரி துப்பாக்கி பிரயோகம்: விசாரணையை நடத்தவுள்ள ஆணையகம்
இரத்தினபுரி - கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய பொலிஸ் ஆணையகம் முடிவு செய்துள்ளது.
விசாரணை தொடர்பான உத்தரவு, பதில் பொலிஸ் அதிபருக்கு அனுப்பப்படும் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.
விசாரணை ஒரு மாதத்திற்குள் முடித்து, அதன் அறிக்கையை பொலிஸ் ஆணையகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம்
2025 ஜூன் 30ஆம் திகதியன்று கொஸ்கெல்லயில் உள்ள ஒரு வீட்டுக்கு பொலிஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் ஆயுதமேந்திய குழுவினர் சென்று, இரட்டை சகோதரர்களையும் அவர்களது நண்பரையும் கைவிலங்குகளைப் பயன்படுத்தி கடத்திச் சென்று பின்னர் தொலைதூர இடம் ஒன்றில் வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இதில் இரட்டையர்களில் மூத்தவர் தப்பிச் சென்றார். 22 வயதுடைய இளையவரான இரந்த சுரஞ்சன கொல்லப்பட்டார். அவர்களது 27 வயது நண்பர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
