இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் ஏற்பட்டுள்ள அதிகளவான உயிரிழப்புக்கள்
இரத்தினபுரி மாவட்டத்தில், லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோயினால் அதிகளவான உயிரிழப்புகள் மற்றும் தொற்றுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர, சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள்
ஆபத்துள்ள பிரதேசங்கள்
அவர் மேலும், மாவட்டத்தில் மொத்தமாக 1,882 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளர்கள் மற்றும் 22 இறப்புகள் பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டு, நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில், இந்த நோயினால், அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகியவை அடங்கும்.
'எலிக்காய்ச்சல்' எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புக்களின் செயலிழப்பு உள்ளிட்ட ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், இது மரணத்தை விளைவிக்கும் என்று கன்னங்கர எச்சரித்துள்ளார்.
நோய்த்தொற்றுகளைத் தடுக்க, பிராந்திய சுகாதார சேவை அலுவலகங்கள் அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கிடைக்கும் பயனுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சையான டொக்ஸிசைக்ளின் (Doxycycline) ஐ எடுத்துக் கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
