ரத்துபஸ்வல வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலை
வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட 4 சந்தேகநபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) தீர்பளித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு கம்பஹா- ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததுடன், 45 பேர் காயமடைந்த வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் நால்வரும் கம்பஹா மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீரை கோரியும், தொழிற்சாலை ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தனர்.
வழக்கு விசாரணைகள்
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து வந்த நிலையில், 2019 ஓகஸ்ட் மாதம், அப்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், ரத்துபஸ்வல வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர நிமல் ரணவீர மற்றும் நிசாந்த ஹப்பு ஆராச்சி ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட் பார் என்ற மூன்று நீதிபதிகள் அமர்வை நியமித்தார்.
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு செப்டெம்பரில் சட்டமா அதிபர், குறித்த நான்கு பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் 2024 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று விசாரணையின் முடிவில் தீர்ப்பை இன்று வரை ஒத்திவைத்த கம்பஹா மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட்-பார் அமர்வு இன்று தமது தீர்ப்பை அறிவித்துள்ளது.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |