காதலனுடன் விடுதி அறைக்கு சென்ற யுவதி மர்மமாக உயிரிழப்பு! முரணான வாக்குமூலத்தினால் பெற்றோர் சந்தேகம்
இரத்தினபுரி - இறக்குவானை, மாதம்பை பகுதியில் ஹோட்டல் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானை, புஞ்சி பர்வத்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
யுவதி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில்,யுவதியின் சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம் தெரிவித்த பெற்றோர்
இருப்பினும், யுவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், யுவதியின் உடல் முழுவதிலும் சேறு காணப்பட்டதாகவும், விடுதி அறைக்குள் எவ்வாறு சேறு காணப்படும் என்றும் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி, கடந்த 4 ஆம் திகதி பகல் மாதம் பே பனாவல வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு தனது காதலனான இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்று அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
விடுதி அறைக்கு இளைஞனும், குறித்த யுவதியும் சென்ற நிலையில் யுவதி பசியாக இருப்பதாக கூறியதாகவும், உணவு கொண்டு வருமாறு தனது வங்கி அட்டையை அவரிடம் கொடுத்ததாகவும் காதலன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உணவினை பெற்றுக்கொண்டு அறைக்கு வந்தபோது கதவு மூடப்பட்டிருந்ததாகவும், தனது காதலி கதவைத் திறக்காத நிலையில், அப்போது விடுதிக்கு பொறுப்பாக இருந்த பெண்ணிடம் தெரிவித்து, அறையை திறக்க முடியாமையினால் விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்து விடுதி ஊழியர் ஒருவரின் உதவியுடன் யன்னல் வழியாக பார்த்த போது, யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னுக்கு பின் முரணான வாக்குமூலம்
இதனையடுத்து காதலன் தனது காதலி அறையில் மயங்கி விழுந்துவிட்டதாக விடுதிக்கு பொறுப்பாக இருந்த மேலாளரிடம் கூறி முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றதாக விடுதிக்கு பொறுப்பானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
யுவதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது இளைஞனின் முச்சக்கரவண்டி நடுவழியில் நின்றதையடுத்து, மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக காதலனும் பொய் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காதலன், ஒவ்வொருவரிடமும் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்களை அளித்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி செவிலியர் படிப்பை முடித்து தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியேறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டமையினால் உயிரிழந்த யுவதியின் காதலன் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுர சோமசிறியின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி விக்ரமபால விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
