கொழுந்து பறிக்கும் போட்டியில் அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடம்
தனியார் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் சிறந்த தரமான பச்சை தேயிலை கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டியானது மூன்றாவது முறையாக 60 தோட்டங்களில் பணியாற்றும் 50 தொழிலாளர்களுக்கு இடையில் நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் இன்று(01) நடைபெற்றுள்ளது.
20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப் பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் மற்றும் தரமான கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழுந்து பறிக்கும் போட்டி
இதில் தலவாக்கலை - பெருந்தோட்ட நிறுவத்தின் கீழ் இயங்கும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு 6 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும், தங்கப்பதக்கமும் 43 இன்ச் அங்குலம் கொண்ட ஸ்மார்ட் டிவி ஒன்றும் ( inch smart tv) வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசு மூவருக்கும் 75 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு மூவருக்கும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.
வருட வருடம் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன, தேயிலை துறையின் எதிர்கால இருப்பினை தக்க வைக்கும் முகமாகவும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும் உற்சாகப்படுத்துவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






