அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு தினங்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நாள்
தகவல்களின்படி, முதல் நாளிலும், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 712,319 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது.
இதேவேளை, கடந்த மூன்று நாட்களுக்குள் வாக்களிக்க முடியாத அஞ்சல் மூல வாக்காளர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 அல்லது 12ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது! 21 நிமிடங்கள் முன்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri