வவுனியாவில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்
வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவுவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ளனர்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும்.
வைத்திய ஆலோசனை
ஈரமான, சேறு நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் அல்லது வயல்களில் வேலை செய்வோர் தங்கள் கால்களில் காயங்கள் அல்லது தோல் நோய்கள் இருப்பின் அவதானமாக இருத்தல் வேண்டும்.
தற்போது பலர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காயச்சல், தலைவலி, உடல் வலி என்பன ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப்
பெறவும்.
குறிப்பாக அண்மையில் வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞன் எலிக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
