கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள எலிக்காய்ச்சலால் இருவர் பலி
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis என சந்தேகிக்கப்படும் பக்றிரீயாவினால் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றைய தினம் (06) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் உள்ள இருவரே உயிரிழந்துள்ளனர்.
நோய் அறிகுறிகள்
எனவே, மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சினைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
