இராணுவப் பயிற்சி களத்தில் யுக்ரெய்னின் ஜனாதிபதி! (வீடியோ)
யுக்ரெய்னின் ரஸ்யாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள போர்க்சூழல் தொடர்பாக அந்த நாட்டின் ஜனாதிபதி-வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky ) முதன்முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது நாட்டு எல்லையில் இருந்து ரஸ்ய படைகள் விலக்கிக்கொள்ளப்படுவதை தாம் இன்னும் அவதானிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரெய்னின் மேற்குப்பகுதியில் இடம்பெற்ற இராணுவப்பயிற்சியை பார்வையிட சென்ற அவர், பிபிசியிடம் இது குறித்து கருத்துரைத்தார்.
ரஸ்யா, தமது படைகளை யுக்ரெய்ன் எல்லையில் இருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்திருந்தபோதும், அது அறிக்கையாக மாத்திரமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
ஏற்கனவே, தாம் யுக்ரெய்ன் எல்லையில் மேற்கொண்டு வந்த பயி;ற்சிகள் முடிவடைந்துள்ளநிலையில், தற்போது அங்கிருந்து படைகளை விலக்கிக்கொள்வதாக ரஸ்யா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த படைவிலகல் இடம்பெறவில்லை என்று யுக்ரெய்னுக்கு ஆதரவாக செயற்படும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



