72 வருடங்களின் பின் மோசமான சாதனையொன்றை படைத்த பங்களாதேஷ் வீரர்
72 வருடங்களின் பின் அரிதான முறையொன்றில் ஆட்டமிழந்து மோசமான சாதனையொன்றை பங்களாதேஷ் வீரர் இன்று ஏற்படுத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம் இந்த மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
எதிரணியின் களத்தடுப்பிற்கு இடையூறு செய்த காரணத்திற்காகவே அவர் ஆட்டமிழந்துள்ளார்.
மோசமான சாதனை
பங்களாதேஷின் ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின், 41ஆவது ஓவரை வீசிய நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசனின் பந்தை முஷ்பிகுர் ரஹீம் எதிர்கொண்ட பிறகு அவர் தனது கையால் பந்தை தட்டி விட்டுள்ளார்.
தொடர்ந்து நியூசிலாந்து அணியினர், முஷ்பிகுர் களத்தடுப்பிற்கு இடையூறு செய்ததாக மேன்முறையீடு செய்ய, நடுவரின் தீர்ப்பிற்கிணங்க முஷ்பிகுர் 35 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
1951ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியொன்றில் லியோனார்ட் ஹட்டன் என்ற இங்கிலாந்து வீரரே முதலாவதாக இந்த முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
அதன் பிறகு இன்று முஷ்பிகுர் ரஹீம் இவ்வாறு ஆட்டமிழந்து 72 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |