அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள்
ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் பிறந்திருக்கின்றன.
தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தன.
பிறந்த ஏழு நாட்களான அந்த ஆண் மற்றும் பெண் வெள்ளை சிங்கக் குட்டிகள் அண்டலூசியா பகுதியில் உள்ள மலைக் கிராமமான ஜிமெனா டி லா புரோன்டெராவில் (Jimena de la Frontera) உணவளிப்பதற்காக சிறப்பு அறைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டன.
இந்த சிங்கக்குட்டிகளின் பெற்றோர்கள் சாதாரண ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆகும். எனவே அவைகளிடம் இருந்து வெள்ளை சிங்கங்கள் பிறந்துள்ளது விலங்கியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது உலகில் 13 க்கும் குறைவான வெள்ளை சிங்கங்களே அவற்றின் இயற்கையான
வாழ்விடங்களில் வாழ்கின்றன என கூறப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri