யாழில் இறந்த நிலையில் காணப்பட்ட அரிய வகை சருகுப்புலி: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மணற்காடு – குடத்தனை இடைப்பகுதியில் பூனை இனத்தைச் சேர்ந்த அரிய வகை சருகுப்புலி ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீதியோரமாக இறந்த நிலையில் காணப்படும் சருகுப்புலியை, அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இவ்வாறு சருகுப்புலி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
உயிரிழப்புக்கான காரணம்
இதன் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் சிலரால் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

எனினும், குறித்த சருகுப்புலி உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri