கடும் வறட்சி! விபத்தில் சிக்குண்டு அரியவகை உயிரினங்கள் உயிரிழப்பு(Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி நிலமை காரணமாக குடிநீரைத் தேடிச் செல்லும் விலங்கினங்கள் வீதி விபத்தில் சிக்குண்டு உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது..
இவ்வாறு இன்று (22.08.2023) உன்னிச்சை பிரதான வீதியில் அரிய வகை மர அணில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உயிரினங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு-உன்னிச்சை பகுதியில் உள்ள கால்நடைகள் பிரதான வீதி ஊடாக, தினசரி குடிநீருக்காகவும் உணவுக்காகவும் அலைந்து திரிவதனால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் , மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை திருடர்களும் மிகவும் சூட்சுமமான முறையில் களவாடிச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மட்டக்களப்பு நகரிலிருந்து மிக உயரமான இடத்திலுள்ள காட்டு விலங்குகளும், அரிய வகை உயிரினங்களும், ஏனைய கால்நடைகளும் தற்போது குடிநீருக்காக கிராமத்திற்குள் வரும்போது அவை வீதியில் செல்லும் கனரக வாகனங்களில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பாதிப்பு
வாகரை வடக்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மண்முனை மேற்கு பிரதேச
செயலக பிரிவில் மாத்திரம் 1800 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை
மாவட்டத்தின் படுவாங்கரை பகுதில் மேற்கொண்டுள்ள தங்களது விவசாயச் செய்கை,
மேட்டுநிலப் பயிற்செய்கை உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களும் வறட்சியினால்
பெரிதும், பாதிக்கப்பட்டுள்ளன.









வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
